இன்றும், நாளையும் பேரளம் ரெயில்வே கேட் மூடப்படும்
பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் பேரளம் ரெயில்வே கேட் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.
நன்னிலம்:
பேரளத்தில் தென்னரக ரெயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள திருவாரூரில் இருந்து - மயிலாடுதுறை செல்லும் சாலையில் பேரளத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் 2 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும். இதனால் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும். இந்த தகவலை திருவாரூர் முதுநிலை பொறியாளர் சுரேஷ்பாபு, பேரளம் இளநிலை பொறியாளர் கணேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.