எரவாஞ்சேரியில் மக்கள் சந்திப்பு இயக்கம்

எரவாஞ்சேரியில் மக்கள் சந்திப்பு இயக்கம்

Update: 2022-08-29 16:35 GMT

குடவாசல்

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்களை நேரில் சந்தித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்து கூறும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 20-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குடவாசல் அருகே எரவாஞ்சேரி கடைத்தெருவில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் 40 சதவீதம் விலை உயர்ந்து உள்ளது. எனவே மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியை தூக்கி எறிய அனைவரும் முன் வர வேண்டும் என்றார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சேகர், கந்தசாமி, குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்