காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-07 12:15 GMT

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் உத்திரமேரூர் வட்டம் திருவானைகோயில் கிராமத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், காவந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு கடனுதவி காசோலையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்