திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

Update: 2023-09-12 11:06 GMT

கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 50 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 71 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 93 மனுக்களும் என மொத்தம் 391 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கொடிநாள் வசூல் செய்து வழங்கிய 11 அலுவலர்களுக்கு முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மேலும் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்