மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இதுவரையிலும் புகார் மனுக்கள் வழங்கி தீர்வு கிடைக்காத 3 பேர் மற்றும் புதிதாக 18 பேர் என மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு கமிஷனர் ராஜேந்திரனிடம் மனுக்களை வழங்கினர்.
மனுக்களை பெற்று கொண்ட அவர், அதன் விவரங்களைக் கேட்டறிந்து சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
போலீசாருக்கு அறிவுரை
கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கினர்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அங்கும் ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.