மக்கள் நீதிமன்றம் மூலம் 62 வழக்குகளுக்கு தீர்வு

இளையான்குடியில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 62 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Update: 2023-05-15 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடியில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 62 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி இளையான்குடியில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் நீதிபதியுமான ஹரி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் நீதிமன்ற அமர்வு உறுப்பினர் வக்கீல் அன்பழகன் கலந்து கொண்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச குற்றவியல் வழக்குகள், வங்கிக்கடன் நிலுவை சார்ந்த வழக்குகள், குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள் என 177 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நஷ்டஈடு

இதில் 62 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.6 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. குடும்ப ஜீவனாம்சம் வழக்குகளில் தம்பதிகள் இருவருக்கும் சமாதானம் செய்து இணைந்து வாழ வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.

ஒருவருக்கு சமரச தீர்வின்படி ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள் சிவகுமார், அண்ணாதுரை, ஜான் சேவியர், பாலையா, ரவி, குமார், முருகபாண்டி உள்பட வழக்குகள் சம்பந்தப்பட்ட வக்கீல்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்