விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் பயணிக்கும் மக்கள்

திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.

Update: 2023-09-26 19:15 GMT

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.

ஆபத்தான பயணம்

திருவாரூர் மாவட்டம் என்பது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் திருமணம், கோவில்விழா மற்றும் துக்க நிகழ்வுகளுக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது சரக்கு வாகனங்கங்களில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.ஒரு கிராமத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் மற்ற இடங்களுக்கு எளிதாக செல்ல சரக்கு வாகனத்தை பயன்படுத்துவது அதிகரித்து இருக்கிறது.இந்த பயணம் என்பது ஆபத்தானது என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை. போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொதுமக்களை சரக்கு வாகன டிரைவர்கள் ஏற்றி செல்வது வேதனைக்குரியது.

விபத்துகள்

சரக்கு வாகனங்களில் அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஏற்றி செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், வாகனம் கட்டுபாட்டை இழந்து கவிழ்வது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காததால் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் மக்கள் பயமின்றி பயணம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

எனவே போக்குவரத்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சரக்கு வாகனங்களில் மக்கள் பயணம் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது ஆபத்தானது என்பது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்