சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்
புரட்டாசி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் காசிமேடு மீன்பிடி ஏலக்கூடத்திற்கு மீன்களை வாங்க அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
திருவொற்றியூர்:
இந்துக்களின் கடவுளான விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.இந்த புரட்டாசி மாதங்களிலில் பெரும்பாலூம் மீன்களை சாப்பிட அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டாமல் விரதம் இருப்பார்கள். இந்த புரட்டாசி மாதமானது அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நிலையில் காசிமேடு மீன்பிடி ஏலக்கூடத்திற்கு மீன்களை வாங்க அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக காசிமேட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் ஏலமுறையில் தொடங்கும் மீன் விற்பனையில் சிறிய வியாபாரிகள் பெரிய வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் மீன்களை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலையானது அதிகமாகவே காணப்படுகிறது.
கடந்த வாரம் 1100 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் கிலோ 1500 ருபாய் வரை விற்கப்பட்டது. இதுபோல் வவ்வால் 800, பெரிய சங்கரா 700, நண்டு 800 ரூபாய் முதலும் இறால் கிலோ 600 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சராசரியாக ஒவ்வொரு மீன்களிலும் 300 முதல் 500 வரை விலையேற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.