வயல் வழியாக உடலை மயானத்துக்கு எடுத்து செல்லும் மக்கள்

மெலட்டூர் அருகே சாைல வசதி இல்லாததால் வயல் வழியாக உடலை மயானத்துக்கு மக்கள் எடுத்து செல்கிறார்கள். எனவே விரைவில் சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-12 20:34 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் அருகே சாைல வசதி இல்லாததால் வயல் வழியாக உடலை மயானத்துக்கு மக்கள் எடுத்து செல்கிறார்கள். எனவே விரைவில் சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயானத்துக்கு சாலை வசதி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புத்தலை கீழ ஆதிதிராவிடர்தெரு கிராமத்துக்கு பல ஆண்டுகளாக மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல் வழியாக உடலை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக வயல்வழியாக மக்கள் உடல்களை எடுத்து செல்லும் போது சேறும், சகதியுமாக உள்ளதால் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த பகுதியில் மயானத்துக்கு செல்ல சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட முயற்சி

இந்தநிலையில் இரும்புத்தலை கீழ ஆதிதிராவிடர்தெருவில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். அப்பேது மயானத்துக்கு செல்ல வசதி கேட்டு

உடலை கிராமத்தினர் மயானத்துக்கு எடுத்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புத்தலை ஊராட்சி தலைவர் பாலாஜி, கிராம நிர்வாக அதிகாரி மகாராஜன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் மயான சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இறந்த மூதாட்டி உடலை உறவினர்கள், மற்றும் கிராமத்தினர் தோளில் சுமந்தவாறு வயல்வெளி வழியாக மயானத்துக்கு எடுத்து சென்று உடலை அடக்கம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்