வீடுகளை தேர்வு செய்வதில் முறைகேடு: ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி அருகே வீடுகளை தேர்வு செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-02 18:45 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே நல்லூர் ஒன்றியம் தொளார் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மூலம் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் 26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிலையில் தகுதியில்லாத பயனாளிகளுக்கு வீடு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதியான நபர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோர் தொளார் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வீடுகளை தேர்வு செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்