சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோத்தகிரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

கோத்தகிரி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-13 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஆடுபெட்டு கிராமத்தைச் சேர்ந்த 54 வயது கட்டிட தொழிலாளி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி ஆடுபெட்டு ஊர் தலைவர் விஜயன் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து கிராம மக்களுடன் சப்- இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மீண்டும் குன்னூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உரிய நிவாரணம் பெறலாம். புகார் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபன மானால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் சமாதானமடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்