தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள்...!

தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர்.

Update: 2022-10-24 16:15 GMT

சென்னை,

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தீபாவளி கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, சேலம், வேலூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மிகுந்த ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதனால் தீபாவளி தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ளது.

தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் பல்வேறு பகுதிகளில் பட்டாசு குறைவாகவே வெடித்தனர். ஆனால் இரவில் மக்கள் அனைவரும் வண்ண வெடிகள், கம்பி மத்தாப்பு, புஸ்வானம், தரச்சக்கரம், பட்டாசு உள்ளிட்டவைகளை வெடித்து கோலாகலமாகவும், ஆனந்தமாகவும் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்