கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-03 18:45 GMT

ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளர், ஊராட்சி உதவியாளர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12,000 வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் 3 சதவீத அகவிலைபடியை 4 சதவீதமாக 1.7.2022-ந் தேதி முதல் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலக முன்புள்ள கடை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. தலைவர் சங்கரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்