விருதுநகரில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
விருதுநகரில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமசிவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராமசுப்பு, பொருளாளர் சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஓய்வூதியர்களுக்கு 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர், சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்குவதுடன், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.