ஓய்வூதியர் நேர்காணல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில்ஓய்வூதியர் நேர்காணல் 30-ந் தேதியுடன் முடிகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவரும் 2022-ம் ஆண்டிற்கான நேர்காணல் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
நேர்காணலை தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தபால் நிலைய ஊழியர் மூலமாக நேரடியாக வீட்டிலேயும், இ-சேவை மையம் மூலமாகவும் நேர்காணல் செய்திடலாம். கருவூலத்திற்கு சென்றும் நேர்காணல் செய்திடலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.