விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பி தராத நிறுவனத்துக்கு அபராதம்; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

ரத்து செய்த விமான டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை திருப்பி தராத தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-08-27 19:38 GMT

ரத்து செய்த விமான டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை திருப்பி தராத தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விமான டிக்கெட்

நெல்லை டவுன் பெருமாள் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் பிரவீன் ஜோ ஷா (வயது 69). இவருடைய மகன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டார். இதற்காக ஜூலை மாதம் 26-ந்தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் விமான டிக்கெட் எடுத்தார். அதற்கு ரூ.85,975 கட்டணமாக செலுத்தினார். ஏஜென்சி அதற்குரிய டிக்கெட்டை வழங்கியது.

இதற்கிடையே அவரால் 1-ந்தேதி பயணம் செய்ய முடியவில்லை. இதையடுத்து டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரத்து செய்ததற்கு உரிய தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை தருமாறு ஏஜென்சியிடம் கேட்டு உள்ளனர். பின்னர் ரூ.52,875-க்கு வங்கி காசோலை கொடுத்து உள்ளனர். மீதி பணத்தை கணக்கு பார்த்து தருவதாக கூறிஉள்ளனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்ப வந்து விட்டது.

அபராதம்

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் மீது நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரித்து பிரவீன் சந்தர் ஷா என்பவருக்கு டிக்கெட் ரத்து செய்த கட்டணம் நீங்கலாக மீதி பணம் ரூ.52,875 வழங்க வேண்டும், அவரது மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.40 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.2 ஆயிரம் சேர்த்து மொத்தம் 94,875 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்