ஊராட்சி கூட்டம்

பட்டணம்காத்தான் ஊராட்சி கூட்டம்

Update: 2023-09-06 18:37 GMT

பனைக்குளம்

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது தலைமையில் துணைத் தலைவர் வினோத் முன்னிலையில் நடைபெற்றது. செலவினர் பட்டியல் குறித்து ஊராட்சி செயலர் வினோத் கண்ணன் வாசித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் அதிக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியையொட்டி இப்பகுதி அமைந்துள்ளதால் திருமண மண்டபங்கள், நவீன தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பகுதியில் மனையிடங்களை முறையாக அனுமதி பெற்று பொதுமக்கள் கட்டிடங்களை கட்ட வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படும். இப்பகுதிக்கு காவிரி குடிநீர் விரைவில் வினியோகம் செய்யப்படும். வல்லபை நகர், வேல் நகர், மீனாட்சி நகர், ஆத்மநாதசாமி கார்டன், ஓம்சக்தி நகர் பகுதிகளில் தெரு விளக்கு விஸ்தரிப்பு செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தை ராணி, சாராணி, ரேணுகா முருகன், கண்ணன், மஞ்சுளா, லீலாவதி, ராஜேந்திரன், நாகரத்தினம், முரளி, திருப்பதி, ஹேமலதா, பாரதி, நர்மதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் வினோத் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்