பேஷன் புரூட் விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி பகுதியில் பேஷன் புரூட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ பழங்கள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-11-30 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பகுதியில் பேஷன் புரூட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ பழங்கள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய், வால் பேரிக்காய், ரம்பூட்டான், பிளம்ஸ், ஆரஞ்சு, பேஷன் புரூட் (தாட் பூட்), ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சில இடங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலரும் தங்களது வீடுகளில் பழ மரங்களை நட்டு உள்ளனர்.

இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் மிளிதேன், தாந்தநாடு, கிளப் ரோடு மற்றும் ரைபிள் ரேஞ்ச் பகுதிகளில் உள்ள வீடுகளில் பேஷன் புரூட் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மரங்களில் தற்போது மருத்துவ குணம் கொண்ட பேஷன் புரூட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பழ பண்ணை

கோத்தகிரி பகுதியில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு பேஷன் புரூட் பழங்கள் நல்ல முறையில் வளரும் தன்மை கொண்டது. இந்த பழத்தை மாதுளம் பழம் போல் விதையுடன் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார் சத்து உள்ளது. பழத்தின் தோலை நீக்கி பழச்சாறாக இரவு நேரத்தில் குடித்தால் நல்ல தூக்கம் வருவதுடன், இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. தற்போது விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ பேஷன் புரூட் ரூ.40 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கடைகளில் ரூ.60 முதல் ரூ.70 வரை பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. குன்னூர் பழ பண்ணையில் பேஷன் புரூட் நாற்றுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை நட்டு வளர்த்தால் சில மாதங்களிலேயே வளர்ந்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்