போதிய மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி

நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-20 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம் ரெயில் நிலையம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் வழியாக தினந்தோறும் விரைவு ெரயில்கள், பயணிகள் ரெயில்கள், சரக்கு ெரயில்கள் சென்று வருகின்றன.

சென்னையில் இருந்து அதிகாலை நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ெரயிலில் சாதாரண நாட்களில் 100 பயணிகளும், விடுமுறை நாட்களில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர்.

மின்விளக்குகள் எரிவதில்லை

இரவு நேரங்களிலும் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலிலும், மன்னார்குடி யிலிருந்து நீடாமங்கலம் வழியாக கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நீடாமங்கலம் ெரயில் நிலையத்தில் இருந்து ஏறி செல்கின்றனர்.

பயணிகள் அதிக நடமாட்டம் உள்ள நீடாமங்கலம் ெரயில் நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள் தட்டுத்தடுமாறி ரெயில்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது.

பயணிகள் அவதி

நேற்று அதிகாலை 4.55 மணிக்கு சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ெரயில் முதலாவது நடைமேடைக்கு வந்து நின்றது. அப்போது முதல் நடைேமடை பகுதியில் 4 மின்விளக்குகள் மட்டுமே எரிந்தது. இதனால் ரெயிலில் இருந்து இறங்க பயணிகள் அவதிப்பட்டனர். போதிய மின்விளக்குகள் எரியாததால் ெரயில் நிலையத்தின் பெரும்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.

ெரயில் வந்து செல்லும் நேரங்களில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிலைய அதிகாரியிடம், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்