நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

இருக்கன்குடியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2022-06-14 19:09 GMT

சாத்தூர், 

இருக்கன்குடியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இருக்கன்குடி

சாத்தூர் அருகே அர்ச்சுனா ஆறும், வைப்பாறும் இணையும் இடத்தில் இருக்கன்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தென்மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இங்கு திருவிழா காலங்களில் மட்டும் தற்காலிகமாக பஸ்நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும், மற்ற நேரங்களில் வெயிலிலும், மழையிலும் நனைந்து நிற்க வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணிகள் நிழற்குடை

ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையும் முற்றிலும் சேதம் அடைந்ததால் அகற்றப்பட்டு விட்டது. மேலும் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

எனவே இங்கு வரும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நிரந்தரமாக நிழற்குடை அமைக்கவும், சுகாதாரத்தை பேண சுகாதார வளாகங்கள் அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்