"விமர்சனங்களை சகித்து கொள்ள முடியாத கட்சி பா.ஜனதா"-ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி

"விமர்சனங்களை சகித்து கொள்ள முடியாத கட்சி பா.ஜனதா" என ப.சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.

Update: 2023-06-10 19:00 GMT

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திாியுமான ப.சிதம்பரம் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை தரக்குறைவாக விமர்சித்ததாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். ராகுல்காந்தி இந்தியாவை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. விமர்சிக்கிறாா் அவ்வளவுதான். இவர்களால் எந்த விமா்சனத்தையும் பொறுத்து கொள்ள முடியாது.

பிரதமரை விமர்சிக்கிறவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ.க.வை சேர்ந்த தமிழக தலைவர் ஒருவர் பேசியிருக்கிறார். விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா?. விமர்சனத்தையே சகித்து கொள்ள முடியாத ஒரு கட்சி (பா.ஜனதா). வெளிநாடு சென்றால் மவுனவிரதமா இருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கலெக்டர் மெர்சி ரம்யாவை ப.சிதம்பரம் எம்.பி. சந்தித்து பேசினார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் திருமயத்தில் ரூ.2 கோடியில் நூலகம் அமைக்கவும், கொத்தமங்கலத்தில் ரூ.1 கோடியே 25 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதில் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்