விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு: விஜயகாந்த் முடிவு எடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2022-06-16 12:05 GMT

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உட்கட்சித் தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் 70-வது பிறந்தநாள் அன்று தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையாக எழுச்சியோடு கொண்டாட உள்ளோம்.

தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததே அதிமுக தோல்விக்கு காரணம். உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது. தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்து வருகிறது.

மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் முடிவு எடுப்பார். ஆதீனம் அரசியல் பேசுவது தவறு. ஆன்மீகவாதி அரசியல் பேசக்கூடாது. அரசியல்வாதி ஆன்மீகம் பேசக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே இங்கு சர்ச்சைக்கு வேலை இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்