வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை பிளவுபடுத்தும் கட்சிகள்

வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை அரசியல் கட்சிகள் பிளவுப்படுத்துகின்றன என்று பா.ஜனதா சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டினார்.

Update: 2022-08-24 16:57 GMT

பா.ஜனதா சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 34 கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து 15 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.

ஆனால் அதற்கு பதில் அளித்து பேசினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. பிரிவினைவாத சக்திகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக சில அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்துகின்றன. ஆனால் பா.ஜனதா ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கொள்கை கொண்டது. எனவே நாட்டின் நன்மைக்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாங்கள் வலியுறுத்தி கொண்டே இருப்போம், என்றார்.

இதையடுத்து கிழக்கு மாவட்ட பா.ஜனதா சிறுபான்மை அணி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட தலைவர் தனபாலன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சந்தியாகு சந்திரசேவியர், பொதுச்செயலாளர் இன்பராஜ், செயலாளர் முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்