நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.;
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன். குமார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று சந்தித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிக்கு வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் அறிவித்தனர். அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.