ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்முப்பெரும் விழா நடைபெற்றது.
தொட்டியத்தை அடுத்த எம்.புத்தூர் ஊராட்சி மேலக் காரைக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை, பள்ளி திறப்பு மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். எம்.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விடிவெள்ளிரகுபதி, வட்டார ஆசிரியர் பயிற்றுனர் மதுமதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தி, மனோன்மணி, பள்ளிக்கல்விக் குழு தலைவர் பரமேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.