ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-08-14 10:11 GMT

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி வரவேற்றார்.

கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து எந்தவிதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அஜெண்டாவிலும் இடம் பெறவும் இல்லை.

அப்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆ.வேலாயுதம் பேசுகையில், 2 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை அதிகாரிகளே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்

அது எந்த திட்டத்தில் வருகிறது என்று முடிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் 700 மீட்டர், 800 மீட்டர் உள்ள கிராமப்புற சாலைகளை ஏன் தேர்வு செய்யவில்லை.

மேலும் பணி தேர்வு செய்யும்போது ஒன்றிய பொறியாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசுவது இல்லை. ஆன்லைனில் பணிகள் குறித்து தகவல்களை கலெக்டருக்கு அனுப்புகிறீர்கள்.

இவற்றை நாங்கள் கடந்த சில கூட்டங்களில் ஒன்றிய பொறியாளரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்றார்.

அதற்கு பொறியாளர் சரவணன், நான் என் பணியை செய்கிறேன் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி பேசுகையில், இனிவரும் காலங்களில் ஒன்றிய கவுன்சிலர்களை அழைத்து பணிகள் தேர்வு செய்வது சம்பந்தமாக பேசுங்கள் என்றார்.

இதையடுத்து அனைத்து உறுப்பினரும் அவர்களின் குறைகளை கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்