ஊராட்சி செயலாளர் முன்ஜாமீன் மனு தாக்கல்

கிராமசபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

Update: 2023-10-05 19:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் மான்ராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன், விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியனை தேடி வந்தனர். இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தங்கப்பாண்டியன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வீடியோ ஆதாரங்களை பார்த்து போலீசார் ஆலோசனை நடத்திய போது விவசாயி அம்மையப்பனை அவர் அருகில் இருந்த ராசு (40) என்பவர் கன்னத்தில் அடித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மையப்பனை தாக்கிய ராசுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்