ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-09 18:13 GMT

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் கே.வி.குப்பத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கலந்துக்கொண்டு திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்