ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா ஊர் நல அலுவலரை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Update: 2023-04-24 18:45 GMT

கடலூர்

கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் (தெற்கு) ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி பழனிசாமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மனுக்கள் பதிவு செய்யும் இடம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊர்நல அலுவலர், கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசு திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கிறார். அவரால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகிறது. ஆகவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதை கேட்ட போலீசார், இது பற்றி கலெக்டரிடம் மனுவாக அளியுங்கள் என்று கூறினர். இதை கேட்ட அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்