வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜை
கம்பிளியம்பட்டியில் வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜை நடந்தது.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் உள்ள வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் கருட பஞ்சமி யாகபூஜை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில் சாணார்பட்டி சுற்று வட்டாரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர். அவர்கள் குடும்ப பிரச்சினைகள் விலகுவதற்கும், உடல் நலன் வேண்டியும், தொழில் தடை நீங்குவதற்கும் வெள்ளை பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சாமிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.