ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டது... அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி

பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தேற்றுவிட்டது... என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார்.

Update: 2023-03-02 07:55 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 7 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,964 தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 431வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறுகையில், மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தேற்றுவிட்டது.. அவ்வளவுதான்.. என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கிளம்பினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்