காசிவிஸ்வநாதர் கோவிலில் பல்லக்கு தேர்திருவிழா

Update: 2023-03-14 19:30 GMT

வேப்பனப்பள்ளி:-

வேப்பனப்பள்ளி அருகே ஆவல்நத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி குகை கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனையும் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து இரவு காசி விஸ்வநாதர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கு தேர் உற்சவத்தில் அமர்த்தப்பட்டு கோவில் வரை ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ மிதித்தல், பானம் வெடித்தல், பசு, ஆடுகள் கோழிகள் கோவிலுக்கு தானம் அளித்தல் என பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு வீரகாசி கலைநிகழ்ச்சி நடனம் நடந்தது. பல்வேறு அமைப்புகள், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்