திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-29 11:50 GMT

உலக புகழ் பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் ஆண்டு தோறும் பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வேதமலைபெருவிழா குழு அகஸ்திய கிருபா அன்புசெழியன் தலைமையில் தாழக்கோவில் பக்தவசலேஸ்வரர் சாமி கோவில் வளாகத்தில உலக நன்மைக்காகவும், கழுகு மீண்டும் வர வேண்டியும் வேத மலை பெருவிழா குழு சார்பில் நேற்று காலை கூட்டு பிராத்தனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து 1,008 பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக தாழக்கோவிலில் இருந்து கோபுர வாசல் வழியாக சன்னதி வீதி அடிவார வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

மலைகோவில் உள்ள மூலவர் வேதகிரீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆர்.டி. மணி, ஏழுமலை, ஆறுமுகம், சரவணன், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்