வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

Update: 2023-07-12 23:12 GMT

டி.என்.பாளையம்

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது. வனச்சரகர் மாரியப்பன் கலந்து கொண்டு ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஓவியப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்