கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி
கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் 24-ம் தேதி, 8-ம் ஆண்டு அக்கினி வசந்தோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 12-வது நாளில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஞ்சாலி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை, நடைபெற்றது.
இதில் கல்வாய் கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்வாய் கிராம மக்கள் செய்து இருந்தனர்.