பழனிக்கு பாதயாத்திரை செல்லும்முருக பக்தர்களுக்கு அன்னதானம்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-01-16 23:45 GMT

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்களுக்கு அன்னதானம்

எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வேண்டியும், மீண்டும் தமிழக முதல் -அமைச்சராக வேண்டியும் ஈரோடு மாநகர் மாவட்டம் பெரியசேமூர் பகுதி அ.தி.மு.க. சார்பில், பழனி பாதயாத்திரை குழு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜன், கேசவமூர்த்தி, முருகு சேகர், ராமசாமி, வக்கீல் சண்முகசுந்தரம், வட்ட செயலாளர்கள் தேவராஜ், பழனிசாமி, சேரன் சேனாதிபதி, சசிக்குமார், பகுதி துணை செயலாளர் தங்கராசு, சக்திவேல், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

சிறு வியாபாரிகள் சங்கம்

இதேபோல் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு ஈரோடு வழியாக பாதயாத்திரை செல்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம், குடிநீா், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள். ஈரோடு கனிமார்க்கெட் அனைத்து சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாரச்சந்தை சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தினசரி சங்க தலைவர் நூர்சேட் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பெரியார்நகர் பகுதி செயலாளர் ரா.மனோகரன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதான பொட்டலங்களை வினியோகம் செய்தார். இதில் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சங்கர், சேகர், மூா்த்தி, சலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்