படவட்டம்மன் கோவில் திருவிழா

சின்னபெரமனூரில் படவட்டம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-09-14 16:34 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள சின்னபெரமனூர் கிராமத்தில் படவட்டம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதல், கூழ் ஊற்றுதல், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை கங்கை பூஜை, பூங்கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீமிதிக்கும் நிகழ்ச்சி, மாவிளக்கு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம், பாலாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் சின்னபெரமனூர், பி.அக்ரஹாரம், கெட்டூர், பவளந்தூர், ஜெல்மாரம்பட்டி, மன்னேரி, பூஞ்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்