கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் லைசென்ஸ் பெற வேண்டும்
வேதாரண்யத்தில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார். நகராட்சி ஆணையர் அறிவிப்பு
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார். நகராட்சி ஆணையர் அறிவிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலகசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலகசடு கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குப்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.
லைசென்ஸ் பெற வேண்டும்
விண்ணப்பம் படிவம் பெறபட்ட 30 நாட்களில் நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். லைசென்ஸ் பெற்ற வாகனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக லைசென்ஸ் பெற்று இயக்க வேண்டும். உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.