விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் - குன்றத்தூர் நகராட்சி

விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க குன்றத்தூர் நகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-11-21 09:12 GMT

குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்றத்தூர் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் குன்றத்தூர் பகுதிகளில் மாடு வளர்க்கும் நபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடித்து ஒரு பகுதியில் அடைக்கப்படும் என்றும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் ரூ.1,000 அபராதம் செலுத்தி மீட்டு செல்ல வேண்டும் என்றும் தொடர்ந்து இதுபோல் பிடிபடும் மாடுகளை பசு காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்