திருத்தணி பஸ் நிலையம் அருகே கடையில் 66 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி விற்ற உரிமையாளர் கைது

திருத்தணி பஸ் நிலையம் அருகே கடையில்66 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி விற்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 11:54 GMT

குட்கா விற்பனை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்காமணி (எ) பாபு (வயது 42). இவர் திருத்தணி பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் குட்கா பொருட்களான ஹான்ஸ், போதைப்பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பாபு கடையில் சோதனை செய்ததில் 66 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது.

இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக பாபுவை கைது செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று முன்தினம் போலீசார் ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெட்டி கடை உரிமையாளரான பீகாரைச் சேர்ந்த சூர்யதேவ் பிரசாத் (41) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்