கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

சோளிங்கரில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-05 17:57 GMT

சோளிங்கர் பஸ் நிலையத்தில் இருந்து கருமாரியம்மன் கோவில் கூட்ரோடு வரை உள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுவாதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் கன்னியப்பனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் ஆணையர் கன்னியப்பன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் பிரசாந்த், பொறியாளர் ஆசிர்வாதம், நெடுஞ்சாலைத்துறையின் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு ஏற்றார் போல் கால்வாய் அமைக்கபடும் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்