மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் தொழில் தொடங்க வாய்ப்பு

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வணிக வளாகம் கட்டுவதற்கும், தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-19 07:57 GMT

சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வணிக வளாகம் கட்டுவதற்கும், தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிதி இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு துறை பொது மேலாளர் கிருஷ்ணன், இணை பொது மேலாளர் நரேந்திரகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரசன்ன குமார் ஆச்சார்யா பேசியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்க தேவையான இட வசதி உள்ளது. நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் 3 ஆயிரம் சதுர மீட்டர் முதல் 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை உள்ளது. இங்கு வணிக வளாகம், சிறு குறு மற்றும் நடுத்தர கடைகள் வைப்பதற்கு இடவசதி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் https://chennaimetrorail.org/wp-content/uploads/2023/05/list-of-Empanelled-consultants.pdf பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்