பா.ஜனதா சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
நெல்லையில் பா.ஜனதா சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் பா.ஜனதா அலுவலகம் முன்பு கோடை காலத்தையொட்டி பா.ஜனதா சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி மற்றும் தண்ணீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், தச்சநல்லூர் வடக்கு மண்டல தலைவர் பிரேம்குமார், மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ், வர்த்தக பிரிவு குரு மகாராஜன், விளையாட்டு பிரிவு செந்தில், மண்டல துணைத்தலைவர் அங்கம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.