சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-26 11:21 GMT

சென்னை,

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் வருவாய்துறை ஆணையரகத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 011-24193100, 9289516711 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 9600023645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்