ரத்தம் பகுப்பாய்வு மையம் திறப்பு

சிவகாசியில் ரத்தம் பகுப்பாய்வு மையம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-14 20:18 GMT

சிவகாசி, 

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி குருதி கொடையாளர் தினவிழா மற்றும் ரத்தம் பகுப்பாய்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (விருதுநகர்) முருகவேல் வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் கலந்து கொண்டார். விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான குருதி பகுப்பாய்வு மைத்திற்கு தேவையான உபகரணங்களை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் ஏ.பி.செல்வராஜன் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு காலக்கட்டங்களில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சிவகாசி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் பாலவிக்னேஷ், கோகுல்பாரதி, இந்தியன் ஆயில் கர்ப்பரேஷன் மதுரை மண்டலம் மகேஷ், விருதுநகர் காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அய்யனார் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்