சீரமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டிற்கு திறப்பு

விருதுநகர் அருகே சீரமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டிற்கு வந்தது.

Update: 2022-05-28 19:10 GMT

விருதுநகர், 

விருதுநகர் நகராட்சி வி.என்.பி.ஆர். பூங்கா சீரமைக்கபப்படவேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து விருதுநகர் ரோட்டரி சங்கம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகமும், ரோட்டரி சங்கமும் இணைந்து நகராட்சி பூங்காவினை சீரமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கான முயற்சிகளை முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி மேற்கொண்டார். நகரசபைத் தலைவர் மாதவன் சீரமைப்பு பணியை முன்னின்று கண்காணித்தார். இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் நகரசபை தலைவர் மாதவன், கமிஷனர் சையது முஸ்தபா கமால், ரோட்டரி சங்க கவர்னர் (தேர்வு) இதயம் முத்து, ரோட்டரி சங்கத் தலைவர் காயத்ரி, நிர்வாகிகள் விஜயகுமாரி, வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்