ஊட்டி கென்ட்ஸ் அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கென்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

Update: 2023-09-03 19:00 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று ஏ டிவிஷன் லீக் போட்டியில் ஊட்டி கென்ட்ஸ் அணியும், கூடலூர் அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கென்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர் மணி 12 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் சதமடித்து 138 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரர் ஆரோக்கிய நாதன் 35 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து களமிறங்கிய கூடலூர் அணி 10.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஊட்டி கென்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் அருள் 7 விக்கெட்டுகள், மணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஊட்டி கென்ட்ஸ் அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 138 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மணி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்