ஆன்லைன் ரம்மி தடை மசோதா: கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம் - டாக்டர் ராமதாஸ்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம்.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கத்தை அரசு அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தினமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி எல்லோருக்கும் தேவையானதை கொடுக்க வேண்டும்.10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.