ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு நிச்சயமாக கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும் - அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு நிச்சயமாக கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2023-03-26 05:14 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எந்த சட்டம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதோ அதே சட்டம் திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயமாக கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அது தான் அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சட்டம் இயற்றப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். சட்டம் இயற்றாத போது நாங்கள் என்ன செய்வது. தற்போது இருக்கின்ற சட்டத்தை வைத்து ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யார் பொறுப்பு என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் ஒவ்வொருவராக விடுதலையாகினர். உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ? அதற்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விரைவில் வரும் என அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியது. இது மகிழ்ச்சியான செய்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்