வெண்ணந்தூரில் தொடர் மழை: சின்ன வெங்காயம் திருகல் நோயால் பாதிப்பு-விவசாயிகள் கவலை

வெண்ணந்தூரில் தொடர்மழை காரணமாக சின்ன வெங்காயம் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-09-01 18:04 GMT

வெண்ணந்தூர்:

தொடர் மழை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்தின்னிப்பட்டி, அத்தனூர், மாட்டுவேலம்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பொன்பரப்பிப்பட்டி, தொட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணகான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு மேல் வெண்ணந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

திருகல் நோயால் பாதிப்பு

இதனால் சின்ன வெங்காயம் நீரில் நனைந்து, அழுகி நாசமாகி வருகிறது. மேலும் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெண்ணந்தூர் பகுதியில் பெய்து வரும் மழையால் சின்ன வெங்காயத்தை திருகல் நோய் தாக்கி உள்ளது. இதனால் அதனை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாகுபடிக்கு செலவான பணம் கூட கிடைக்காத வகையில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நோயை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்